முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் ‘இளைஞர் எழுச்சி நாளாகக்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 70 பள்ளிகளிலிருந்து சுமார் 210 அறிவியல் படைப்புகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன.
இப்போட்டியில் ஈரோடு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்:
- சூப்பர் சீனியர் பிரிவு: 11-ஆம் வகுப்பு மாணவி எஸ். பிரதக்ஷனா முதலிடம் பிடித்துள்ளார்.
- சீனியர் பிரிவு: 10-ஆம் வகுப்பு மாணவி டி. மேகவர்ஷனா முதலிடம் பிடித்துள்ளார்.
- ஜூனியர் பிரிவு: 8-ஆம் வகுப்பு மாணவி எஸ்.கே. பிரதிக்சா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மாவட்டத்தில் வெற்றி பெற்ற இம்மாணவிகளின் சிறந்த அறிவியல் படைப்புகள், அடுத்து நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்குப் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவிகளையும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களையும் வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் செ.து. சந்திரசேகர், முதல்வர் வெ. லதா, வேளாளர் அறக்கட்டளை உறுப்பினர்களான சி. பாலசுப்ரமணியம், எம். யுவராஜா, இல. சென்னியப்பன் மற்றும் ஆசிரியர்கள் நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.




