Close
அக்டோபர் 20, 2026 5:42 மணி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 138-வது பிறந்த நாள் விழா நாமக்கல்லில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எம்.எல்.ஏ.க்கள் திலீப், சந்திரசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் பிஆர்ஓ சதீஸ்குமார், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், கிளை நூலகர் செல்வம், வாசகர் வட்ட தலைவர் மோகன், நாமக்கல் கவிஞரின் மகன் ராஜா, மருமகள் சசிகலா, பேரன்கள் அமிர்தலிங்கம் மாரியப்பன், அனுமந்தன் பாண்டியன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள கவிஞரின் சிலைக்கு பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயலாளர் ரகோத்தமன், பேராசிரியர் முத்துசாமி, ஜெயபால், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top