Close
அக்டோபர் 20, 2026 6:08 மணி

திருவண்ணாமலையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்: தொழிலகங்களில் பூஜை செய்து வழிபாடு

இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 11-ம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக நவராத்திரி விழாவை பொறுத்தவரை முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம்.
விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை என்று அழைக்கப்படும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருட்களுக்கு மரியாதை செலுத்தி வழிபாடு நடத்துவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது.

திருவண்ணாமலை நகரம் முழுவதும் உள்ள வீடுகள் ,கடைகள், வணிக வளாகங்கள், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஸ்டாண்டுகள், லாரி மற்றும் வாகனப் பட்டறைகளில் வாகனங்கள் மற்றும் தொழில் உபகரணங்களைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

இதனிடையே திருவண்ணாமலையில் பழங்கள், பூக்கள் விலை உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை  மொத்த மார்க்கெட்டில் மஞ்சள் வாழை ஒரு தார் ஒன்று ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. மேலும் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150லிருந்து ரூ.200 வரையும் சாத்துக்குடி ரூ.100லிருந்து ரூ.140 வரையும், மாதுளை ரூ.120க்கும், கொய்யா ரூ.80க்கும், ஆரஞ்சு ரூ.65க்கும் விற்கப்பட்டது.

சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகமாக விற்கப்பட்டது. தேங்காய் ரூ.30 லிருந்து ரூ.60 வரை விற்கப்படுகிறது. மொத்த விற்பனை சந்தையில் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.450 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொரி தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான நெல் மற்றும் பொரி அரிசியின் விலை, சந்தையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அண்ணாமலையார் கோயில் சிறப்பு வழிபாடு

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.  ஆயுத பூஜையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 8 வயது குட்டி யானையான நமச்சிவாயத்திற்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை முதலே  பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிகள்படி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், பக்தா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்

கடந்த அக்.17 முதல் வரை அக்.20 வரை 4 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருந்ததால் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

தொடா்ந்து, 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பக்தா்கள் கிரிவலம் வந்து அங்குள்ள அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top