Close
நவம்பர் 26, 2026 6:49 மணி

ஐடிபிஐ வங்கியைத் தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக தென்காசியில் ஆர்ப்பாட்டம்!

ஐடிபிஐ வங்கியைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தென்காசி மாவட்ட ஐடிபிஐ வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து வங்கிச் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தனியார் மயமாக்கும் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், ஐடிபிஐ வங்கி வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் செல்வதற்கு எதிராகவும் வங்கி ஊழியர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அறிவித்துள்ள இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top