Close
நவம்பர் 26, 2026 7:05 மணி

செயற்கை தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாத தொழில்கள் விவசாயம், மருத்துவம், கல்வி மட்டுமே: ஸ்ரீதர் வேம்பு

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் 93-வது கிளையை தென்காசி மாவட்டத்தில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, இந்த விழாவில் பங்கேற்ற ஸ்ரீதர் வேம்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்காலத்தில் ஏ.ஐ-யின் வளர்ச்சியால் நாட்டின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எனவும், செயற்கை தொழில் நுட்பத்தால் 4 துறைகள் எப்பொழுதுமே எந்த பாதிப்பையும் சந்திக்காது. குறிப்பாக, மருத்துவம், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் இந்த 4 துறைகள் மட்டுமே வளர்ச்சியடையும்.

செயற்கை தொழில்நுட்பத்தால் பல்வேறு மாற்றங்கள் மற்றும் பலன்கள் உள்ள நிலையில், ஏ.ஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

மேலும், ஒரு காலத்தில் நியூக்ளியர்க்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது நியூக்ளியர் மூலமாக நாம் மின்சாரம் தயாரித்து அனைவரும் பயன்படுத்தி வருகிறோம், அதேபோல் எதிர்காலத்தில் செயற்கை தொழில்நுட்பத்தின் பலன் அனைவருக்கும் புரியவரும். இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரரயில் விட வேண்டும். அப்போதுதான் கிராமங்கள் வளர்ச்சி அடையும் வேலைவாய்ப்பும் பெருகும் என்று கூறினார்.

மேலும், செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறுகள் நடக்காதவாறு அரசு தொழில்நுட்ப சட்டங்களை கடுமையாக்கி அதன் மீதான கண்காணிப்பையும் அதிகப்படுத்தினால் மட்டுமே அதன் உதவியுடன் அரங்கேற்றப்படும் தவறுகள் குறையும். கடந்த 6 மாத தமிழக வெற்றி கழக ஆட்சியில் திருப்தி இருந்தாலும், அவர்கள் முன் பல்வேறு சவால்களும் உள்ளன எனவும், அதை சரி செய்ய அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top