Close
அக்டோபர் 8, 2026 6:45 காலை

அரூர், ஆண்டாபுரம் ஏரியில் சீமை கருவேல மரங்கள் அற்றிய பின் தூர்வார வேண்டும்: கொ.ம.தே.க. கோரிக்கை

மோகனூர் தாலுகா, அரூர், ஆண்டாபுரம் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றிய பின்பு, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொ.ம.தே.க., வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொமதேக மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தின், பிரதான இரண்டாவது பெரிய ஏரி, மோகனூர் தாலுகாவில், அரூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெரிய அளவில் வளர்ந்துள்ள, சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கொ.ம.தே.க., மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில், பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுக்கிணங்க, ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அரூர் ஆண்டாபுரம் ஏரியில் உள்ள, சீமை கருவேல மரங்களை அகற்றிய பின்பு ஏரியை தூர்வார வேண்டும்.

இந்த ஏரியை தூர் வாரினால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

சீமை கருவேல மரங்களை அகற்றிய உடன், உடனடியாக ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top