Close
அக்டோபர் 8, 2026 3:52 மணி

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப்போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்  துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட அளவிலான மாணவிகளுக்காள தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 குறு மையங்களில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 92 பள்ளிகளைச் சேர்ந்த 736 மாணவிகளுக்கு 44 வகையான போட்டிகள் நடைபெற்றது. இன்று மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகள் இந்த மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் செல்வம், முதன்மை கல்வி அலுலவர் முனிராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top