Close
அக்டோபர் 8, 2026 6:47 மணி

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தை ஒட்டுமொத்தமாக தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top