Close
அக்டோபர் 9, 2026 10:14 மணி

பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழகம் முழுவதும் பாமக தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்தை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸின் 58வது பிறந்தநாளை பாட்டாளி மக்கள் கட்சியினர், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் மருத்துவ முகாம்களை நடத்தியும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில், தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது

நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணைத்தலைவர்கள் சேது. அரிகரன், அய்யம்பெருமாள், மாவட்ட தலைவர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பீபின் நரேந்திரன், முதன்மை மேலாளர் ஆசை மாணிக்கம் மற்றும் ஒளி ஆய்வாளர்கள், உதவி விழி ஒளி ஆய்வாளர்கள் பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாயில் இலஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் திருமலைக்குமாரசாமி யாதவ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி சுந்தர், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், ஊடகப்பிரிவு செயலாளர் பாஸ்கர், இலஞ்சி பேரூர் செயலாளர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சண்முகசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருமலை குமாரசாமி, நகர தலைவர்கள் பழனிச்சாமி , சாஸ்தா, தென்காசி நகர செயலாளர் கெய்சர் , குற்றாலம் பேரூர் செயலாளர் தண்டபாணி, செங்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, இலஞ்சி பேரூர் தலைவர் செந்தில், இலஞ்சி இளைஞரணி தலைவர் அன்புமணி இளைஞரணி செயலாளர் வரதன், சிவா குலசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top