Close
அக்டோபர் 11, 2026 8:05 மணி

மதுரையில் ஆதி சிவன் அகாடமியின் சலங்கை பூஜை விழா

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் செயல்படும் ஆதி சிவன் அகாடமியின் முதலாம் ஆண்டு விழாவும், இரண்டாம் ஆண்டு சலங்கை பூஜை விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு பூஜைகள் செய்து, அகாடமியில் பரதநாட்டியம் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு பூஜை செய்யப்பட்ட சலங்கைகளை குரு வினோதினி அணிவித்தார்.

நிகழ்ச்சியை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன் தொகுத்து வழங்கினார். முன்னதாக, நடைபெற்ற முதலாம் ஆண்டு விழாவில் ஆதி சிவன் அகாடமியின் பயிலும் மாணவர்களின் குரல் இசை ,
கருவி இசை பரதநாட்டியம் நிகழ்வுகள் நடைபெற்றது.

விழாவில் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழிசை கல்லூரியின் முதல்வர் முனைவர் மல்லிகா வாழ்த்துரை வழங்கினார். இசை பேராசிரியர் மதுர கலாமணி கே. தியாகராஜன், நிருத்ய கலா கேந்திரா, நிறுவனர் சீதா ஸ்ரீனிவாசன், முனைவர் ரங்கநாயகி சச்சிதானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பக்க வாத்திய கலைஞர்களாக நட்டுவாங்கம் வினோதினி வயலின் ஜனனி குரலிசை புவனேஸ்வரி மிருதங்கம், கோபிநாத், கடம் ஜீவா ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top