Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 61.10 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 62.10 லட்சம் கிடைத்தது.

நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் கோட்டை முனியப்பன் கோயில்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம். அந்தவகையில் ஜூன் 25 ஆம் தேதிக்கு பின் கடந்த 3ம் தேதி, கோயில்களில் உள்ள 13 உண்டியல்கள் திறக்கப்பட்டன.

ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில், உண்டியல்களில் இருந்து காணிக்கைகள் எண்ணி கணக்கிடும் பணி காலை 10:00 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெற்றது. அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் (கூடுதல் பொறுப்பு) சந்திரன், திருச்செங்கோடு உதவி ஆணையர் சின்னதுரை ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ. 62 லட்சத்து 10 ஆயிரத்து 573 ரூபாய் ரொக்க பணமும், 133 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top