Close
நவம்பர் 26, 2026 5:26 மணி

புதுக்கோட்டை மைய நூலகத்தில் 59-வது தேசிய நூலக வார விழா: போட்டி வெற்றியாளர்களுக்கு ஆட்சியர் பரிசு

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 59-வது தேசிய நூலக வார விழாவையொட்டி, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார்.

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 184 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த விழாவில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பிரகாஷ், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் தங்கமூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் முத்து உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top