Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

கடலூரில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி, ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை

நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பண்ணைகளில் ரூ.8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரூ.7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டம் வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளி நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சமீபத்தில் கடலூரில் பறவை காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன. இதில் எதிரொலியாக ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த மண்டலத்திலிருந்து ஓமன் நாட்டிற்கு மாதத்திற்கு ரூ.6 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது கடலூரில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகாரப்பூர்வமாக இந்த மாத 13ஆம் தேதி ஆய்வுகளின் படி உறுதி செய்யப்பட்டது. எனவே ஒரு வாரமாக ஓமன் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி இல்லை.

தற்போது வரையில் ரூ.3 கோடி அளவுக்கு முட்டை முட்டைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இவை நாமக்கலில் தேக்கமடைந்துள்ளன. அதே நேரத்தில் வட மாநிலங்களில் பணி காலம் சீதோசன நிலை கருத்தில் கொண்டு, அங்கேயும் அங்கு முட்டை நுகர்வு அதிகரிக்கும் சூழல் உள்ளதால், தேக்கமடைந்துள்ள முட்டைகளை அங்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மண்டலத்தை தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து, முட்டை ஏற்றுமதி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓமன் நாட்டுடன் தொடர்பு கொண்டு, முட்டையை ஏற்றுமதிக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top