Close
அக்டோபர் 1, 2026 8:22 மணி

உசிலம்பட்டி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி நூதனப் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையில் உள் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்கக்கோரி பாய் தலையணையுடன் வந்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், பாப்பாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பேயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் மனைவி மனியம்மாள் (68) என்ற மூதாட்டியின் வீட்டின் அருகில் பொதுப் பாதையை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி தடுப்புகள் அமைத்து சுமார் 7 ஆண்டுகளாக பொதுப் பாதையை பயன்படுத்த முடியாமல் செய்து வருவதாகவும் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு பாய் தலையணையுடன் வந்த மூதாட்டி படுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் யாரையும் செல்ல விடாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top