Close
அக்டோபர் 20, 2026 6:27 மணி

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில கால்பந்து போட்டி: மதுரை மாவட்ட மாணவர்கள் முதலிடம்

நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டியில், மதுரை மாவட்ட பள்ளி மாணவர்கள் அணி முதலிடம் பெற்றது.

மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான, முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டிகள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 15ம் தேதி துவங்கி 6 நாட்கள் நடைபெற்றது. இன்று இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்ட பள்ளி மாணவர் அணி முதலிடத்தைப் பெற்று கோப்பையை வென்றது. கன்னியாகுமரி மாவட்டம் 2ஆம் இடத்தையும், நீலகிரி மாவட்டம் 3ஆம் இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் நாமக்கல் எம்எல்ஏ., திலீப், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் சேர்மன் பெரியசாமி, விளையாட்டுத்துறை மண்டல மூத்த மேலாளர் அருணா, கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top