Close
அக்டோபர் 23, 2026 3:14 காலை

தென்காசியில் போதை பொருளுக்கு எதிராகவும், கைபேசி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு நடைபயணம்

சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கும் போதை பொருளை ஒழிப்பதற்கு தமிழக அரசின் மூலமாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தென்காசியில் சி.எஸ்.ஆர் டிரஸ்ட் சார்பில் இன்று போதை பொருளுக்கு எதிராகவும், கைபேசி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக சிஎஸ்ஆர் டிரஸ்ட் திட்டம் மற்றும் செயலக்க பிரிவு தலைவர் பிரகாஷ் மற்றும் கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு தலைவர் சமீர்கான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

இந்த நடை பயணத்தின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் பேசியதாவது: போதை பொருளை தொடக்கத்திலேயே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

போதைப் பொருள் தொடர்பான தகவல்களை குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கில் இது மாதிரியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சமூகத்தில் 90 சதவீத குற்றங்கள் போதை பொருளால் நடைபெற்று வருகிறது.

குற்றங்களை குறைக்கும் வகையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சமுதாயத்திற்கு எதிரான குற்றமாக இந்த போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று பேசினார்.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைபயணம் ஹவுசிங் போர்டு நகராட்சி பூங்கா வரை சென்றது. இந்த நடை பயணத்தின் போது பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் போதை பொருள் மற்றும் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top