Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

நாமக்கல் மாவட்டத்தில், 50 மையங்களில் குரூப் 2 தேர்வு: 11,873 பேர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில், 50 மையங்களில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில், 11,873 பேர் பங்கேற்றனர். 2,326 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான, முதல்நிலை தேர்வு  மாநிலம் முழுவதும் நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலூர், திருச்செங்கோடு ஆகிய தாலுகாக்களில், 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9:30 முதல், மதியம் 12:30 மணி வரை நடைபெற்ற இத்தேர்வில், மாவட்டம் முழுவதும், 14,199 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்வில், மொத்தம் 11,873 பேர் பங்கேற்றனர். இது 83.62 சதவீதம் ஆகும். நாமக்கல் தாலுகாவில் 1,002 பேர், ப.வேலூர் தாலுகாவில் 216, ராசிபுரம் தாலுகாவில் 591, திருச்செங்கோடு தாலுகாவில் 517 பேர், என மொத்தம் 2,326 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

இத்தேர்வு கண்காணிப்பு பணியில் சப்-கலெக்டர் நிலையில், 4 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு எளிதாக வந்து செல்லும் வகையில், பேருந்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top