Close
நவம்பர் 28, 2026 7:22 மணி

திருக்குறள் முற்றோதல்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.30,000 பரிசு வழங்கி பாராட்டிய புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்புத் திருக்குறள் விழாவில், 1330 குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவித்துச் சாதனை படைத்த மூன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில், தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற பேராசிரியர் சேதுராமன் மற்றும் நல்லாசிரியர் துரைமாணிக்கம் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘திருக்குறள் திருப்பணித் திட்டத்தின்’ கீழ் தொடர்ந்து 90 நாட்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் பயிற்சி அளித்த அறிஞர்கள் சத்தியராம் ராமுக்கண்ணு, ராமையா, கருப்பையா, பார்த்தசாரதி, கல்வியாளர்கள் விஜயலெட்சுமி, ஜெயலெட்சுமி, தர்மசேகர், கவிஞர் அழகுநிலவன் மற்றும் திருமதி ராணி ஆகியோர் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் செயங்கொண்டான் மற்றும் கவிஞர் முருகபாரதி ஆகியோர் திருக்குறளின் பெருமைகள் குறித்துச் சிறப்புரையாற்றினர். கவிஞர் பீர்முகமது வழங்கிய சுவையான இணைப்புரை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் மகா சுந்தர் மற்றும் பேராசிரியர் மு. கருப்பையா ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந்த விழாவில் கவிஞர் முத்துநிலவன், பேராசிரியர் விஸ்வநாதன், சுதந்திரராஜன், கவிஞர்கள் நிலவை பழனியப்பன், நேசன் மகதி, ஆர்டிஸ்ட் முருகேசன், காசாவயல் கண்ணன், முனைவர் முபா, புதுகை புதல்வன், சாமி கிருஷ், சூர்யா சுரேஷ், வம்பனார் அன்பழகன், மலையப்பன், பாலாஜி, பாஸ்கர், இறையன் பாலா, முனைவர் சாமி சத்தியமூர்த்தி, பேராசிரியர் ஆதவன், பகுத்தறிவாளன், அய்யாவு, ஆடிட்டர் ஆலோசகர் பிரசாத், பாவேந்தர் காசிநாதன், மகாத்மா ரவிச்சந்திரன், முத்துராமலிங்கம், ஷெரீப், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வழக்கறிஞர் நவீன்குமார், செயலர் தினேஷ், ரிஸ்வான், காரைக்குடி அறிஞர் ஜெயங்கொண்டான், தலைமையாசிரியர் ராஜநாராயணன், கண்ணதாசன், ஆர்.ஏ.வி. கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அறிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top