Close
அக்டோபர் 23, 2026 4:26 காலை

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வேலுசாமி, மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.

தமிழகத்தில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தவெக அரசு, கடந்த சட்டசபைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியில், தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தனர். வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதியை முறையாக நிறைவேற்றாததை கண்டித்து தினந்தோறும் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழக விவசாயிகளுக்கு, தவெக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவது முறையல்ல.

மத்திய பாஜக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக 3 புதிய வேளாண் திருத்த சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சித்தனர். அதை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் ஒட்டுமொத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மத்திய அரசு 3 புதிய வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற்றது. இதை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தவெக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல் காலதாமதம் செய்தால், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஒன்று திரண்டு தவெக அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top